22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம் ஆகியன மீதான விவாதங்களை எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு சட்டமூலங்களினதும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமே அன்றைய தினங்களில் நடைபெறவுள்ளது.
இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
