அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப்பட்டிகள் அணிவது கடுமையாக அமுல்படுத்தப்படும்

Date:

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் பயணிகள் இருக்கைப்பட்டிகள் (seatbelt) அணிவதை கட்டமாயமாக்கும் விதிமுறை, நாளை (19) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டிகள் (seatbelt) அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக நாளை முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) மனோஜ் ரனகல தெரிவித்துள்ளார்.

இதற்காக வழங்கப்பட்ட சுமார் ஓராண்டு கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

அதன்படி, இருக்கைப் பட்டிகள் இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேநெடுஞ்ச்சாலைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதிவேகநெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் அனைவரும் இருக்கைப்பட்டிகள் அணிய வேண்டும்.

இருக்கைப்பட்டிகள் அணியாதிருப்பது சாலை விபத்துகளுடன் தொடர்புடைய ஆபத்தை அதிகரிப்பதால், இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரனகல சுட்டிக்காட்டியுள்ளார்.

அபராதம் விதிப்பதற்கோ அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ மட்டுமல்லாமல், சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

திலித் ஜயவீரவின் ரிட் மனு தொடர்பான உத்தரவு இம்மாதம் 30ஆம் திகதி

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

இணையவழியில் ரயில் பயணச்சீட்டு!

ரயில் பயணிகள் இணையவழி (Online) ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக...

நாட்டின் சில பிரதேசங்களுக்கு பலத்த மழை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50...