எல் நினோ வானிலை தாக்கம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது

Date:

எல் நினோ (El Niño) வானிலை நிலைமையின் தாக்கம் காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (05) வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக 34 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 பேருக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த அசாதாரண சூழ்நிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 20,418 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,995 பேருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,842 பேரில் 5,562 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,374 பேரில் 474 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

அநுராதபுர மாவட்டத்தின் 1 பிரதேச செயலகப் பிரிவில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், தொடர்ச்சியாக குடிநீரை விநியோகிப்பதற்கும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தீவிரமாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முன்கூட்டியே கைதை கணித்த நாமல்: அரசியல் பின்னணியா? அல்லது உத்தியோகபூர்வ நடவடிக்கையா?

Airbus விமானக் கொள்வனவில் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச...

பம்பலப்பிட்டி – தெஹிவளை கரையோரப்பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்களை அகற்ற உத்தரவு!

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் அப்துல் ரஹ்மான் யூசுப் அல்-கர்ளாவிக்கு ஜனாதிபதி மன்னிப்பு: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பின் ரத்து

எகிப்திய கவிஞரும் அரசியல் ஆர்வலருமான அப்துல் ரஹ்மான் யூசுப் அல்-கர்ளாவிக்கு (Abdel...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக  லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. விலைக்...