Airbus விமானக் கொள்வனவில் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு முன்னர் தான் கைது செய்யப்படுவேன் என நாமல் கூறியிருந்தார்.
எனவே, இந்தக் கைது அரசியல் ரீதியாக தன்னை முடக்குவதற்காக சோடிக்கப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையிலானது என்ற பிம்பத்தை, கைது செய்யப்படுவதற்கு முன்னரே அவர் உருவாக்கியிருந்தார்.
இந்தக் கைதின் பின்னணி என்ன?
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இன்று நேற்றுத் தொடங்கியவை அல்ல. 2016ஆம் ஆண்டு, அன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
நாமல் ராஜபக்சவைச் சுற்றி மூன்று முக்கியமான வழக்குகள்/விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், போதிய சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு இந்த வழக்கிலிருந்து நாமல் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
3. Airbus வழக்கு
Airbus விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் CIDயும் இணைந்து முன்னெடுத்து வந்த நிலையில், விமானக் கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 800,000 அமெரிக்க டொலர் தொகையை நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Airbus விவகாரத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின்படி, பிரான்ஸைச் சேர்ந்த Airbus நிறுவனத்திடமிருந்து SriLankan Airlines நிறுவனத்துக்காக 14 விமானங்களை கொள்வனவு செய்வதற்கான இலஞ்சப் பணம், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது.
அந்த நிறுவனம், அப்போது SriLankan Airlines நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்த கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பின்னர், சிங்கப்பூரிலுள்ள Standard Chartered வங்கி ஊடாக அந்தப் பணம், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது.
அதன் பின்னர், நிமல் பெரேரா ஊடாக நாமல் ராஜபக்ச அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்பதே விசாரணைகளில் முன்வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த மூன்று வழக்குகளிலும் குறிப்பிடப்படும் முக்கிய நபர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு இடையே தொடர்புகள் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக நிமல் பெரேரா ஊடாகவே Gowers, Krissh, Airbus கொடுக்கல் வாங்கல்கள் நடந்தேறியிருக்கிறது. அதனால் அவர் நாமலின் பினாமி என்று பரவலாக அறியப்பட்டவர்.
Airbus விசாரணைகள் தீவிரமடைந்து கொண்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தின் முக்கியப் புள்ளிகளில் ஒருவராகக் கருதப்பட்ட கபில சந்திரசேன, கடந்த மே மாதம் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்..
அவர் உயிரிழந்தபோது, Airbus விவகாரம் தொடர்பான விசாரணை வளையத்திற்குள் இருந்திருந்தார்.
இந்தச் சூழலில், நாமலின் பினாமியான நிமல் பெரேரா, தன்னூடாக நாமல் ராஜபக்ச இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்று எழுத்துமூலம் சாட்சியமளித்திருக்கிறார். இதுவே இந்த வழக்கின் முக்கியமான “திருப்புமுனையாக” (twist) தற்போது மாறியுள்ளது.
அதேவேளை, Airbus நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்த விசாரணைகளில் வாக்குமூலங்களை வழங்கியிருப்பதாகத் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பது, நாமலை மேலும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது.
இந்தக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கபில சந்திரசேனவின் மனைவியும், சமல் ராஜபக்சவின் இளைய மகனும் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்த வழக்கின் இன்னுமொரு சுவாரஷ்யமான விடயம், இந்த வழக்கு விசாரணைகளை 2019 வரை விசாரணை செய்த கோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸ்ஸானாயகவே தற்போதைய இலஞ்ச ஊழல் ஆணக்குழுவின் பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.
பொதுஜன பெரமுனவும் நாமலும், பாராளுமன்றத்தில் ரங்க திஸ்ஸானாயக்கவை அகற்ற வேண்டும் என அவ்வப்போது குரல் எழுப்பியமைக்கான காரணமும் ஏன் என உங்களால் ஊகிக்க முடியுமாக இருக்கும்.
இலஞ்ச ஊழல் விசாரணைகளில் பணிப்பாளரின் அறிக்கை சமர்பிக்கப்பட்டால், நீதவான் நீதிமன்றத்திற்கு ஏதேனும் விஷேட காரணங்கள் இருந்தால் ஒழிய, பிணை கொடுக்க முடியாது என்ற சட்டத்திற்கு அமையவே நாமலுக்கான பிணை நேற்று மறுக்கப்பட்டிருந்தது.
Short அணிந்து ஜாகிங் போகும் வழியில் CID இற்கு சென்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு, pepsi ஐ குடித்துக்கொண்டு வெளியேறுவார்.
