முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளை உயிர்ப்பிக்க உரிய தரப்பினர் முன்வர வேண்டும்: பிரதமரின் மேலதிக செயலாளர் ஏ.பி.எம் அஷ்ரப் வேண்டுகோள்

Date:

களிகம்பு, பக்கீர் பைத், கஸீதா எனப் பல கலை கலாச்சார அம்சங்கள் நமது சமூகத்தில் பரவலாக ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன; என்றாலும் இஸ்லாமிய விழிப்புணர்வும் மார்க்க அறிவும் இயக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த போது இந்தக் கலைகள் மொளனமாகவே குற்றுயிராக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மீண்டும் இந்தக் கலைகள் வளர்க்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது .

என்ன நடந்தது?

நான் முஸ்லிம் சமயப்பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் முஸ்லிம் இலக்கியம் மற்றும் கலைகளை வளர்ப்பதற்கான சுமார் 35 அல்லது 55 சிறு சிறு திட்டங்களை ஆராம்பித்திருந்தேன். ஆனால் அவற்றில் ஐந்து திட்டங்களையாவது அந்தத் திணைக்களம் தொடரவில்லை .

என்ன நடக்கிறது?

அருகி வரும் இந்தக் கலைகள் பற்றிய நூல்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இந்தக்கலைகளை உயிர்ப்பிப்பதாயின் அவற்றின் வரலாறும், உள்ளடக்கமும், சிறப்பம்சங்களும் நமது இளம் தலைமுறையினரால் கற்கக்கூடியவாறு தொகுத்து பாதுகாத்தப்பட வேண்டும்.

அவை பயிற்சி நூல்களாக பயன்படுத்தப்பட கூடியவாறு தகுதியுள்ள எழுத்தானர்களால் தொடுக்கப்படல் வேண்டும் ; இந்த வகையில் கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்துடன் இணைந்து களிகம்பு (Siraj Siraj Mashoor ), கஸீதா( Ashroff Shihabdeen), பக்கீர் பைத் ( Mohamed Naleem Zainulabdeen ) ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன; அந்த நூல்களைப் பயன்படுத்தி தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு கஸீதா – களிகம்பு – பைத் குழுக்ககளும் உருவாக்கப்படல் வேண்டும்.

அரபு எழுத்தணிக்கலையை வளர்ப்பதற்கான ஒரு முயற்சியும் சுமார் பத்து வருடங்களாக இந்தத் கலையில் ஆர்வமுள்ள ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது; calligraphylanka.org என்ற வலைத் தளத்தில் விபரங்களைப் பார்க்கலாம்; என்றாலும் திட்டமிட்டபடி அல்லாமல் மந்தகதியில் அதன் வேலைத்திட்டங்கள் நகர்கின்றன.

சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்ற இளம் முஸ்லிம் எழுத்தாளர்களால் சிங்கள மொழியில் கஸீதாக்கள் சில எழுதப்பட்டுள்ளன; அவற்றுள் 3 கஸீதாக்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒளிப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன .

யார் பொறுப்பு?

இத்ததைய சூழலில் முஸ்லிம்களின் கலைகளை வளர்ப்பதில் முஸ்லிம் நிறுவனங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பிறுக்கின்றது .
இந்தவகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முதன்மை இடம் பெறுகிறது. இந்தத் திணைக்களத்தின் பெயரே அதைச் சொல்கிறது; அது முஸ்லிம் கலாச்சார மேம்பாட்டுக்கும் உரியதாகும்; ஆனால் அது சமயம் சார்ந்த விடயங்களுக்கு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது.

அடுத்ததாக அதிகமான முஸ்லிம் புத்திஜீவிகளைக் கொண்டுள்ள முஸ்லிம் கலை கலாச்சாரம் தளைத்தோங்கி ய கிழக்கு மண்ணிலே அமைந்துள்ள தென்கிழக்குப்பல்கலைக்கழகத்துக்கும் ஒரு பாரிய பொறுப்பிருக்கின்றது. அவ்வாறே ஜாமிஆ நழீமிய்யாவும் இந்தப் பொறுப்பிலிருந்து மீள முடியாது.

முஸ்லிம் கலைகளை நாம் ஏன் வளர்க்க வேண்டும்?

முஸ்லிம்கள் விரசமான ஆபாசமான வழிகெடுக்கும் கலைகளில் தடம் புரண்டு விடாமலிருக்க இஸ்லாமிய மாற்றீடு ஒன்று தேவை; பொதுவாக ஆன்மீகம் இல்லாத போது கலைகள் மனிதனை தடம் புரளச் செய்யலாம்; அதனால் தான் அத்தகைய கலைகள் விடயத்தில் இஸ்லாம் நம்மை எச்சரிக்கின்றது; ஆனால் அது கலைகளை ஒட்டு மொத்தம் தடுக்கவில்லை என்பதற்கு ‘தலஅல் பத்று அலைனா’ என்ற கஸீதாவின் வரலாறே’ போதுமான சான்றாகும்.

சிலர் இயல்பாகவே கலையுணர்வோடு பிறக்கிறார்கள்; அந்த உணர்வுகள் சரியாக வழிகாட்டப்படாத போது அத்ததையவர்களின் ஆளுமை விருத்திக்கே பாதகமாக அமையலாம் . எனவே கலைகள் வளர்க்கப்படும் போது நல்ல ஆளுமை வளர்ச்சிக்கு அவை கால்கோலும்.

கலைகள் சமூகங்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் உறவுப்பாலங்களாகவும் இஸ்லாமிய தஃவாவுக்கான ஒரு சாதனமாகவும் கூட பயன்படுத்தப்படலாம் .

ஆகவே, இந்தக் கலைகளை வளர்க்கப் பொறுப்பான நிறுவனங்கள் முன்வரா விட்டாலும் முஸ்லிம் பாடசாலைகள் இந்த இடை வெளியை நிறப்ப வேண்டும்; இத்தகைய வருடாந்த போட்டிகளுக்காக மாணவர்களை தயார்படுத்துவதோடு நிறுத்தி விடாமல் பாடசாலைகளில் ஒவ்வொரு முஸ்லிம் கலைக்கும் ஒரு கலைச் சங்கம் அமைக்க வேண்டும் ; அரபு எழுத்தணிக் கழகம், களிகம்புக் கழகம், கஸீதா க்கழகம் என்று பல்வேறு சங்கங்கங்களை/ கழகங்களை அமைக்க வேண்டும்; நான் சென்றுள்ள பாடசாலைகள் பெரும்பாலனவற்றில் 5 முதல் 100 வரை சங்கங்ககள் அல்லது கழகங்கள் இருப்பதாக அறியக் கிடைத்தது.

ஆகவே நாடு முழுவதிலுமுள்ள சுமார் 800 முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் இந்த விடயத்தில் பெரும் பங்காற்ற முடியும்.

எனவே, கல்வியமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஜாமிஆ நழீமிய்யா போன்ற நிறுவனங்களையும் சேர்த்துக்கொண்டு இந்தப்பணியைச் செய்ய முன்வர வேண்டும்.

(மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமிய கலாச்சார நிகழ்வில் (16) நிகழ்த்திய உரையின் சுருக்கம்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...

ஒரு சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது...