களுத்துறை நகரை அண்மித்த சில பகுதிகளில் இன்றைய தினம் 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை களுத்துறை, வாத்துவ, வஸ்கடுவ, மொரந்துடுவை மற்றும் பிலமினாவத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தேவையான நீரை முன் கூட்டியே சேமித்து வைத்து, அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
