சாரதி அனுமதிப்பத்திர அச்சுத்திறனை இருமடங்காக்க திட்டம்
நாட்டில் நிலவும் பிளாஸ்டிக் கார்டுகள் மற்றும் அச்சு இயந்திரங்களின் தட்டுப்பாடு காரணமாக, சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகளும், 6.5 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களும் அச்சிடப்படாது தேங்கியுள்ளன.
இதனால் தற்போது விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும், நவம்பர் மாத நடுப்பகுதியில் புதிய அச்சு இயந்திரங்கள் கிடைக்கவுள்ளதால், சாரதி அனுமதிப்பத்திர அச்சுத்திறனை இருமடங்காக அதிகரித்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இப்பணிகளை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.