Thursday, October 29, 2026

20 ஆண்டுகளைக் கடந்தும் அவதிப்படும் சூடான் அகதிகள்: மனிதநேய உதவிகள் இன்றி லட்சக்கணக்கானோர் தவிப்பு!

1 min read · 2 reads
சூடானின் டார்ஃபுர் பகுதியில் ஏற்பட்ட போரினால் பாதிக்கப்பட்டு, சாட் (Chad) நாட்டிற்குத் தப்பிச் சென்று தஞ்சமடைந்த அகதிகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னல்களுக்கு மத்தியில் சிக்கித் தவிப்பதாக ராய்ட்டர்ஸ் (Reuters) புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
 
போர்ச் சூழலில் இருந்து தப்பிய இந்த அகதிகளின் எண்ணிக்கை மற்றும் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சர்வதேச மனிதநேய உதவிகள் மிகக் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதனால் போதிய உணவு, மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளின்றி லட்சக்கணக்கான அகதிகள் தங்களது எதிர்காலம் குறித்த எந்தவொரு உத்தரவாதமும் இன்றி அனாதரவாகச் சிக்கியுள்ளனர்.
 
அமைதியான வாழ்க்கையைத் தேடி தாய்நாட்டை விட்டு வெளியேறிய போதிலும், இரு தசாப்தங்களைக் கடந்தும் அவர்களின் துயரத்திற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.