Thursday, October 29, 2026

ARNAB  புயல் வலுவிழந்தது; நாட்டின் பல பகுதிகளில் மழை

1 min read · 6 reads

மேற்கு- மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ARNAB  புயல் தற்போது இந்தியாவின் ஆந்த்ர பிரதேஷ் கரையோரத்தை கடந்துள்ளது.

இதனால் இலங்கை வளிமண்டலத்தில் ஏற்படும் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடும் என்பதோடு, அது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படலாம்.

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும் மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர்) வீசுவதால் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.