கடவுச்சீட்டு எடுப்போருக்கு விசேட அறிவித்தல்
ஒருநாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச காரியாலங்களுக்கு வருகை தரும் விண்ணப்பத்தாரர்கள் இன்று (29) முதல் ஒன்லைன் ஊடாக நாளொன்றை முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த சேவைகளை பெறுவதற்கு வருகை தரும் முன்னர் ஒன்லைன் ஊடாக உரிய நேரம் மற்றும் தினத்தை ஒதுக்கிக்கொண்டு, அதற்கமைய பிரதேச அலுவலகங்களுக்கு வருகை தருமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வசதியை கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா மற்றும் மாத்தறை பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறெனினும் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் போது இந்த முன்கூட்டிய ஒன்லைன் பதிவு அவசியமற்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.