நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (14) முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, அதிகாலை 1 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், குறித்த பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
