ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் ஊடான நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு நிறுவனம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் ஊடாகப் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும், OTP மற்றும் வங்கி அட்டை இரகசியத் தகவல்களை எவருடனும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கும், செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தளங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
