Monday, November 23, 2026

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

1 min read

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதரபும் மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.