பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகளின் தரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான இலவச மதிய உணவுத் திட்டம் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு இது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவை உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லையெனவும், வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பிலும் குறித்த குழு விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
அண்மையில் பாராளுமன்றத்தில் இந்த கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன் கல்வித் துறையில் தாக்கத்தை செலுத்தும் நெருக்கடிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.