Wednesday, November 11, 2026

பார்வையற்றோருக்கான “சாம்போ” போட்டியில் தங்கம் வென்று அசத்திய ருகாயத்!

1 min read

பார்வை இழந்ததால் நைஜீரியாவில் தனது அன்றாட வாழ்க்கையில் தனிமையையும் சவால்களையும் எதிர்கொண்ட ருகாயத்திற்கு, ‘சாம்போ’ விளையாட்டு ஒரு புதிய வாழ்வையும் வாழ்க்கைக்குரிய நோக்கத்தையும் அளித்தது. அதனைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு இப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய அவர், பார்வையற்ற பெண்கள் மட்டுமே போட்டியிட்ட முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரான ஆர்மேனியா உலகக் கோப்பையில் (ஏப்ரல் மாதம்) பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அதனைத் தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சாம்போ உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் சமீபத்தில் பங்கேற்றுத் தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்தார்.