நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (05) பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே நிலவுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.