LIVE: 2027 வரவு செலவுத் திட்டம்: நாடாளுமன்றத்தில் உரையைத் தொடங்கினார் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட விவகாரம் ஒன்றின் காரணமாக 2008-ஆம் ஆண்டில் ‘எமிரேட்ஸ்’ (Emirates) நிறுவனத்துடனான கூட்டாண்மையை ரத்து செய்ததிலிருந்து, ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ (SriLankan Airlines) நிறுவனம் மொத்தம் 528 பில்லியன் ரூபா நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, அந்நியச் செலாவணி வரவு 9 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
………………………
நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
……………………………….
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்களைக் கையாள்வதுடன், அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி கூறினார்.
………………………………..
மிகவும் சவாலான காலகட்டமொன்றில் பொருளாதார ஸ்திரத்தன்மை எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் மற்றும் அதன் விளைவாக உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“இந்த அழுத்தங்களை எங்களால் இன்னும் முழுமையாகக் கடந்து வர முடியவில்லை” என்று அவர் கூறினார்.
………………………………………………….
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.