Thursday, November 12, 2026

”அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று ஆய்வு நூல் அமெரிக்காவின் வாஷிங்டன் நூலகத்திற்கு..!

1 min read · 1 reads

கொழும்பில் உள்ள ‘அமெரிக்க இலங்கை ஆய்வுகளுக்கான நிறுவனம்’ (American Institute for Sri Lankan Studies – AISLS) நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரபல எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி ரவூப் செய்ன் தமிழில் எழுதிய ‘இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு’ என்ற வரலாற்று ஆய்வு நூலின் சிங்கள மொழிபெயர்ப்பான ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜெயசிங்க அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட  ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ ‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’ என்ற நூல் கொழும்பில் உள்ள மேற்படி அமெரிக்க நிலையத்தின் அதிகாரியான திருமதி அபிராமி அவர்களிடம் மொழிபெயர்ப்பாசிரியர் தம்மிக ஜெயசிங்க அவர்களினால் உத்தியோகப்பூர்வமாக கடந்த 09ஆம் திகதியன்று அமெரிக்க தூதரக வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்நூல் அமெரிக்காவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற வாஷிங்டன் நூலகத்தில் வைக்கப்பட உள்ளதோடு இலங்கையில் வெளியாகும் தரமான நூல்கள் இவ்வாறு அந்நூலகத்திற்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்படுவதாகவும் திருமதி அபிராமி இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.