நவம்பர் 30 தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு
எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தமது ஆதரவை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.
இன்று (27) நடைபெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமது நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தி, பல ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமது பிரச்சினைகளுக்குத் திருப்திகரமான தீர்வுகள் எட்டப்படவில்லை எனத் தெரிவித்தே குறித்த தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
எவ்வாறாயினும், இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எந்த வடிவத்தில் பங்கேற்கும் என்பது குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.