இந்தியாவின் உயர்மட்ட ஆன்மீகத் தூதுக் குழுவினர் இலங்கை வருகை.

Date:

அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைஷானந்த் கிரி மஹராஜ் (Kaishanand Giri Maharaj) தலைமையிலான 14 பேர் கொண்ட உயர்மட்ட ஆன்மீகத் தூதுக்குழு இன்று (23) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, மன்னார் திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், திருகோணமலை கோணேஸ்வரம், நுவரெலியா சீதா அம்மன் கோவில் மற்றும் பொலன்னறுவையின் பண்டைய சிதைவுகள் ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தருகின்றனர்.

இந்தியர்களின் மத வாழ்வில் சிவ வழிபாடு முக்கிய இடம் வகிப்பதால், இந்திய சிவ பக்தர்களையும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளையும் இலங்கையின் புனித மரபுகளை தரிசிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆரம்பகட்ட முயற்சி இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...