நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

Date:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள் ஹீப்ரு மொழிச் செய்திகளிடையே அதிகரித்து வருவதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

யூகங்களுக்கான காரணங்கள் இந்த மர்மமான சூழலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஐந்து முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

  1.  நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் கடந்த 3 நாட்களாக எந்த வீடியோக்களும் பதிவிடப்படவில்லை. கடந்த 4 நாட்களாக புதிய புகைப்படங்களும் வெளியாகவில்லை. தற்போது வெளியாகும் அறிக்கைகள் அனைத்தும் எழுத்து வடிவிலேயே (Text-based) உள்ளன.

  2. வழக்கமாக நாளொன்றுக்கு ஒன்று முதல் மூன்று வீடியோக்கள் வரை வெளியிடும் நெதன்யாகு, கடந்த மூன்று நாட்களாக ஒரு வீடியோ கூட வெளியிடாதது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

  3. கடந்த மார்ச் 8 முதல், நெதன்யாகுவின் இல்லத்தைச் சுற்றி வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தற்கொலை ட்ரோன்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு வலயம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஹீப்ரு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  4. டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இன்று மேற்கொள்ளவிருந்த இஸ்ரேல் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

  5.  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடியதாகத் தகவல் வெளியானாலும், அது எப்போது நடைபெற்றது என்ற சரியான காலநேரத்தை பிரான்ஸ் எலிசி அரண்மனை தரப்பு வெளியிடவில்லை.

 இந்தத் தகவல்கள் குறித்து இஸ்ரேலிய அரசுத் தரப்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலோ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படவில்லை.

எனினும், நெதன்யாகு சமீபத்தில் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று காயமடைந்த வீரர்களைப் பார்வையிட்டதாக இஸ்ரேலியத் தரப்பு சில தகவல்களை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் அமைச்சர்...