நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace) திட்டத்திற்காக கொழும்பு போக்குவரத்துப் பிரிவினர் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு நாளை மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் அரச விழாவுடன் நிறைவடையவுள்ளது.
இதன்காரணமாக, நாளை முற்பகல் 11.00 மணி முதல் பேஸ்லைன் வீதி, வார்ட் பிளேஸ், தர்மபால மாவத்தை, சுதந்திர சதுக்க சூழவுள்ள வீதிகள் மற்றும் கங்காராம விகாரையை சூழவுள்ள வீதிகள் உட்பட பல பிரதான வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
எனவே, வாகன நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
