ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

Date:

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட முதலாவது குழு நேற்று (01) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2026 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக இம்முறை 3,500 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...