உலக சுற்றாடல் தினத்திற்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் வாரம் இன்று ஆரம்பமாகிறது.
இதன் ஆரம்ப நிகழ்வு வெசாக் பௌர்ணமி தினம் காரணமாக அடவிசி போதி மரக்கன்று பகிரும் வேலைத்திட்டம் இன்று காலை மல்கோன பெதியாகொட ஸ்ரீ வாபிகாராமையில் இடம்பெற்றது.
“Urgent Climate Action” என்ற உலக சுற்றாடல் தின தொனிப்பொருளுக்கமைய இலங்கை இம்முறை சுற்றாடல் தினத்தை நிலைபேறான உயிர்க்கோளம் – பசுமை மாறாத வாழ்வு என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடுகிறது.
இந்த தேசிய சுற்றாடல் தின நிகழ்வு அடுத்த மாதம் 5ம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
