19 இலட்சம் புனித குர்ஆன் பிரதிகளை விநியோகிக்கும் சவூதி அரேபியா: உலகளாவிய நன்மதிப்பும் இலங்கையின் முரண்பாடான நிலையும்!

Date:

இலங்கையில்  புனித குர்ஆன் பிரதிகள் மற்றும் அதன் மொழிபெயர்ப்புகள் தொடர்பாக தேவையற்ற சில சர்ச்சைகளும், தவறான புரிதல்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. புனித குர்ஆனை ஒரு சர்ச்சையான நூலாகக் காட்டும் வீணான முயற்சிகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், சவூதி அரேபிய அரசு உலகிற்கு ஒரு உன்னதமான செய்தியைத் தந்துள்ளது.

புனித ஹஜ் கடமைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு தங்களது நாடுகளுக்குத் திரும்பும் சர்வதேச யாத்திரீகர்களுக்கு, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத்தின் வருடாந்திர சிறப்புப் பரிசாக புனித குர்ஆன் பிரதிகள் வழங்கும் பணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

ஜெத்தாவில் உள்ள கிங் அப்துல்அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில்  இந்தத் திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சவூதி அரேபியா முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்கள், கடல் துறைமுகங்கள் மற்றும் நிலப்பரப்பு எல்லைக் கடக்கும் சோதனைச் சாவடிகளிலும் யாத்திரீகர்களுக்கு குர்ஆன் பிரதிகள் தொடர்ந்து விநியோகிக்கப்படவுள்ளன.

மதீனாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘King Fahd Complex for the Printing of the Holy Qur’an மூலம் அச்சிடப்பட்ட மொத்தம் 19 இலட்சம் (1.9 Million) குர்ஆன் பிரதிகள் இதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிய பிறகும், குர்ஆனைத் தங்களின் தாய்மொழியிலேயே படித்து, விளங்கி, அதன்படி நடப்பதற்கு ஏதுவாக இந்த மொழிபெயர்ப்புப் பிரதிகள் 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மட்டும் ஏன் இந்த நிலை?

சவூதி அரேபியா போன்ற ஒரு வல்லரசு நாடு, உலக நாடுகள் பலவற்றின் மொழிகளில் குர்ஆனை மொழிபெயர்த்து, அதை ஒரு பெருமைக்குரிய பரிசாக லட்சக்கணக்கில் வழங்கி வரும் வேளையில், இலங்கையில் மட்டும் குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் ஏன் சர்ச்சைக்குரிய ஒன்றாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ பார்க்கப்பட வேண்டும்?

உலகளாவிய இஸ்லாமிய விழுமியங்களை சவூதி அரேபியா போன்ற நாடுகள் உலகிற்குப் பறைசாற்றி வரும் இவ்வேளையில், இலங்கையில் குர்ஆன் பிரதிகள் தொடர்பாக எழுப்பப்படும் வீணான சர்ச்சைகள், சில தரப்பினரின் குறுகிய அரசியல் நோக்கத்தையே காட்டுவதாக தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...