“காசாவில் தினமும் 30-40 பேரைக் கொல்ல வேண்டும்”: தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர் பென்-க்வீரின் கருத்தால் பெரும் சர்ச்சை!

Date:

காசாவில் தினமும் 30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும் என்றும், அங்கு மீண்டும் யூதக் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்றும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்வீர் கூறியுள்ள கருத்து சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இணையவழி உரையாடல் (Podcast) ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இதாமர் பென்-க்வீர், “குஷ் கட்டிஃப் (Gush Katif) பகுதி மட்டுமல்லாது காசா முழுவதிலும் மீண்டும் குடியிருப்புகளை அமைக்க வேண்டும்.

பாலஸ்தீன மக்கள் அதிக அளவில் வெளியேறுவதை ஊக்குவிக்க வேண்டும். தீவிரவாதிகள் எவரும் வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது; அவர்களை ஒவ்வொருவராகக் கொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “அங்கு வாழத் தகுதியற்ற சிலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழவே கூடாது, அவர்கள் மனிதர்களே அல்ல. காசாவில் உடனடி அச்சுறுத்தலாக இல்லாதவர்களையும் சேர்த்து, தினமும் இரவில் 30 முதல் 40 பேரைக் இலக்கு வைத்து அழிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீன மக்களின் இடம்பெயர்வு தொடர்பான தீவிரவாதக் கருத்துகளை இவர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வரும் நிலையில், இந்த தற்போதைய பேச்சு மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக்கை, 90...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை...

பாடநூல்கள் காணாமல்போன சம்பவம்: திணைக்கள விசாரணைக்குழு நியமனம்!

பாடநூல்கள் சில காணாமல்போன சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகத் திணைக்கள விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக்...

கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இன்னும்...