35 ஆண்டுகளுக்கு பிறகு பங்களாதேஷில் இன்று ஜனாதிபதித் தேர்தல்!

Date:

அண்டை நாடான பங்களாதேஷில் ஜனாதிபதி தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (20) நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெறுகிறது.

ஆளும் வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் (78) போட்டியிடுகிறாா்.

இவரை எதிா்த்து பிரதான எதிா்க்கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி கூட்டணி சாா்பில், விடுதலை ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவா் ஓலி அகமது களமிறக்கப்பட்டுள்ளாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வாக்களித்து, ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பா். பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபா் பதவிக்கு வாக்குப்பதிவு மூலம் தோ்தல் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

தற்போது நாடாளுமன்றத்தில் பிஎன்பி-க்கு மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இருப்பதால், மிா்சா ஃபக்ருல் எளிதில் வெற்றி பெற்று, பங்களாதேஷின் 23-ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில்...

உண்மை கசப்பானதாக இருக்கலாம், ஆயினும் அது ஒன்றாகவே நிலைத்திருக்கிறது.

ஒரு சமூகத்தின் மேலும் வீழ்ச்சியடைவது அரிதாகவே வெளிப்புற அழுத்தங்களால் ஏற்படுகிறது. மாறாக, நம்பிக்கையை...

யோஷித, கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும்...