சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவர் முஹம்மத் இம்தாத் உலகளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை!

Date:

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலில் நடைபெற்ற 46-ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர் முஹம்மத் இம்தாத் (Muhammad Imdad) 5-வது பிரிவில் உலகளவில் 3-ஆம் இடத்தைப் பிடித்து மகத்தான சாதனை படைத்துள்ளார்.

2026 ஆகஸ்ட் 19, புதன்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட போது, இவருக்கு 55,000 சவூதி ரியால் (இலங்கை ரூபாயில் சுமார் 4.9 மில்லியன்) ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற 3-வது தேசிய திருக்குர்ஆன் மனனப் போட்டியின் 2-வது பிரிவில் முதலிடம் பெற்று, இந்த சர்வதேசப் போட்டிக்கு இவர் தேர்வானார்.

தேசிய அளவிலான இப்போட்டி சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சகம், சவூதி தூதரகம் மற்றும் இலங்கையின் முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

உலக அளவில் பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற புகழ்பெற்ற சர்வதேச மேடையில் இலங்கை மாணவர் ஒருவர் இந்த சாதனையைப் படைத்திருப்பது, நாட்டில் திருக்குர்ஆன் கல்வியின் வளர்ச்சியைப் பறைசாற்றுவதோடு  பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ள மாணவர் முஹம்மத் இம்தாதிற்குத் நாட்டின் பல்வேறு அமைப்புகளும், திருக்குர்ஆன் மனனப் பிரிவு வட்டாரங்களும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் டெங்கு மரணங்கள் 71 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000...

‘கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா ‘வனாதே சத்து’ டுபாயில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கஞ்சிபானி இம்ரான்’...

உண்மை கசப்பானதாக இருக்கலாம், ஆயினும் அது ஒன்றாகவே நிலைத்திருக்கிறது.

ஒரு சமூகத்தின் மேலும் வீழ்ச்சியடைவது அரிதாகவே வெளிப்புற அழுத்தங்களால் ஏற்படுகிறது. மாறாக, நம்பிக்கையை...

35 ஆண்டுகளுக்கு பிறகு பங்களாதேஷில் இன்று ஜனாதிபதித் தேர்தல்!

அண்டை நாடான பங்களாதேஷில் ஜனாதிபதி தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (20)...