பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் ஹோட்டல்கள் உள்ளிட்ட ஏனைய கட்டடங்களை எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலோரப் பாதுகாப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலின்படி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் குறித்த சட்டவிரோத நிர்மாணங்கள் அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மண்டலத்திற்குள் இயங்கும் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிக்கப்பட்ட செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்படாத கட்டடங்களுக்கு எதிராக அதிகாரசபையினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
