‘PSTB’ சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு: சமூக நீதிக்கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு நடவடிக்கை!

Date:

முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு’ (Protection of the State from Terrorism Bill – PSTB) எதிராக, சமூக நீதிக்கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பினால் உயர்நீதிமன்றத்தில் விஷேட நிர்ணய வழக்கொன்று (Special Determination Petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு தற்காலிக அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்ட ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது’ (PTA), பின்னர் நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டு தற்போதும் நடைமுறையில் உள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்கும் சாக்கில் கொண்டுவரப்பட்ட இச்சட்டம்.

மக்களின் அரசியலமைப்புச் சார்ந்த அடிப்படை உரிமைகளை மீறும் பல ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.

வரலாறு நெடுகிலும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூகப் போராளிகள் மற்றும் ஜனநாயகக் குரல்களை ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பல அப்பாவி மக்கள் இச்சட்டத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் நீண்டகாலக் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) முற்றாக நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி (NPP) தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் வாக்குறுதி அளித்திருந்தது.

இருப்பினும், தற்போதைய அரசாங்கமானது PTA சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்தை’ (PSTB) முன்மொழிந்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள PSTB சட்டமூலத்தின் பல பிரிவுகள், அரசியலமைப்பில் மக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும், PTA-வை முழுமையாக நீக்கும் நோக்கத்தை நிறைவேற்றாத வகையிலும் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், சமூக நீதிக்கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் இந்த விஷேட நிர்ணய வழக்கை பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20.10.2026) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘Bus for Zahira’வுக்காக ஊரையே ஒன்றுதிரட்டிய ஆளுமை புத்தளம் மரிக்கார்!

மரிக்கார் மனிதம் நிறைந்த ஒரு சிறந்த மனிதர்! எமது ஊரின் நல்...

உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்து நகரங்களின் பட்டியலில் ரியாத் மெட்ரோ: அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்புடன் மாபெரும் சாதனை!

உலகின் அதிநவீன மற்றும் லட்சியப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் 'ரியாத்...

‘நான் தவறாக வழிநடத்தப்பட்டேன்’; ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப்...

பல நாள் தேடுதலுக்குப் பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

இலங்கையின் தந்தம் கொண்ட காட்டு யானையான ‘அக்போ’ (Agbo), இராணுவத்தினரின் உதவியுடன்...