ஆறு மாதங்களில் நிலுவை வாகன இலக்கத் தகடுகள் விநியோகம்!

Date:

இலங்கையில் நிலுவையில் உள்ள 650,000 வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 450,000 சாரதி அனுமதிப் பத்திரங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார இதுனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில், ஐந்து மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் பதிவு நிலையங்களை நிறுவ மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் முதலாவது நிலையம் கம்பஹாவில் திறக்கப்பட்டுள்ளது. குருணாகல், அனுராதபுரம், அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இத்தகைய நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாகனப் பதிவுச் சேவை, பிற்காலத்தில் ஏனைய வாகன வகைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் துஷார இதுனில் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

மேலும், வாகன இலக்கத் தகடுகளின் தரநிலைகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தலைமுடி, பச்சைக்குத்தல் தொடர்பில் பரவும் வதந்திகள் – நீதியமைச்சர் கண்டனம்!

நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக்...

இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79...

அசாமில் அரச மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி 1,100க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் அகற்றம்!

அசாம் மாநிலத்தில் அரச மற்றும் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட...

ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற வழக்கிற்கு மீண்டும் ஆதரவளிக்க OIC உறுப்பு நாடுகள் தீர்மானம்!

மியான்மரில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவும், இந்த...