Friday, November 6, 2026

புற்றுநோய் மருந்து மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச

1 min read · 3 reads
இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தீவிர கவலை வெளியிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் உடனடித் தீர்வு காணுமாறு அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசு மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்கள் இரண்டும் இந்த மருந்துத் தட்டுப்பாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
  • அட்ரினலின் (Adrenaline)
  • அட்ரோபின் (Atropine)
  • பிரிடன் (Piriton)
  • ஒண்டான்செட்ரான (Ondansetron)
  • மெக்சலோன் (Maxolon)
  • பெனெர்கன் (Phenergan)
  • ஹைட்ரோகார்ட்டிசோன் (Hydrocortisone) உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சில அத்தியாவசிய மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் கூட கிடைக்கவில்லை எனவும், இது அவசியமான மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதில் கடுமையான முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பற்றாக்குறை மருத்துவத்தை நாடும் நோயாளிகளுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
நாட்டின் முழுமையான சுகாதார அமைப்பில் அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய உடனடி அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.