எகிப்து | 5000 ஆண்டுகள் பழைமையான பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

Date:

பழங்கால எகிப்திய மன்னர்களின் இறுதி சடங்குகளிலும் தியாகிகளின் நினைவு நாள் சடங்குகளிலும் பீர் முக்கிய பானமாகப் பருகப்பட்டு வந்திருக்கிறது.

மனித நாகரீகத்தின் ஆதி முதலே கலாசாரத்தின் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக மது இருந்து வருகிறது. நம் வரலாற்று நாவல்களிலும் இலக்கியங்களிலும் பலவகை சோம பானங்கள், கள்வகைகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம்.

தற்போது உலகிலேயே மிகப் பழைமையான மது உற்பத்தி தொழிற்சாலையை எகிப்தில் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் தொல்லியல் மற்றும் சுற்றுலா துறையின் கூற்றுப்படி, இந்த மது தொழிற்சாலை 5000 ஆண்டுகள் பழமையானவை!

இந்த மதுபான தொழிற்சாலை எகிப்தின் கெய்ரோவின் தெற்கில் 280 மைல் தொலைவிலுள்ள நைல் நதியின் மேற்கில் அமைந்துள்ள பாலைவனத்தில் அபிடோஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது கிமு 3100-ம் ஆண்டில் நர்மரின் என்னும் அரசனின் ஆட்சிக்காலத்தில் இருந்திருக்கலாம் என்று தொல்லியல் அமைச்சகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எகிப்து மற்றும் அமெரிக்கா இணைந்து ஆராய்ந்து வரும் தொல்லியல் பணியின் தலைவர்களுள் ஒருவரான, நியூயார்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர்.மாத்திவ் ஆடம்ஸ் இந்த பீர் தொழிற்சாலையை கண்டறிந்துள்ளனர். பழங்கால எகிப்திய மன்னர்களின் இறுதி சடங்குகளிலும் தியாகிகளின் நினைவு நாள் சடங்குகளிலும் பீர் முக்கிய பானமாகப் பருகப்பட்டு வந்திருக்கிறது.

எகிப்தின் தொல்லியல் துறை பொதுச் செயலாளர் டாக்டர் மொஸ்டபா வஜீரி அறிக்கையில்,

“பீர் உற்பத்திக்காக தொழிற்சாலை எட்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் 40 களிமண் பானைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை தானியங்கள் மற்றும் தண்ணீரின் கலவையை சூடேற்றப் பயன்படுத்தப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார். இந்தத் தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் 22,400 லிட்டர் பீர் தயாரிக்க முடியும் என்று மாத்திவ் ஆடம்ஸ் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கினால் முடங்கியிருந்த சுற்றுலாத்துறையை புதுப்பித்து வரவிருக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை காட்சிப்படுத்துவதில் சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றனர். எகிப்து மக்களுக்கு பீர் போலவே சுற்றுலாவிலும் போதைதான்!

நன்றி விகடன்

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...