நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த பேராயர்

Date:

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை தான் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்திக்கப்போவதில்லை என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்த கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவாரம் பேராயரை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.

எனினும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தனது கைகளுக்கு கிடைக்கும் வரை பேராயர் எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திக்கமாட்டார் என பேராயரின் ஊடகப்பேச்சாளர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

இதேவேளை உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மீள் மதிப்பீடு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழுவை பேராயர் நிராகரித்துள்ளார்.

எனினும் குறித்த ஆறுபேர் அடங்கிய அமைச்சரவை குழு முதற் தடவையாக இன்றையதினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...