சீனாவின் ஊகர் மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இனப்படுகொலைச் செயற்பாடுகளாகும் என்று கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள நிலையில் அரசாங்கத்தின் சார்பாகவும் இதே மாதிரியான ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சிககள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளன.
2022ல் சீனாவில் நடத்தப்படவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் இந்தத் தீர்மானத்தின் மூலம் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டுள்ளது.