மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் முக கவசம் அணியாமல் நடமாடிய 57 நபர்கள் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
நேற்று(23) மாலை காத்தான்குடியின் முக்கிய வீதிகளில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.பெருமளவிலான பொலிசார் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
முகக்கவசம் அணியாதோர் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கையில் காத்தான்குடி பொலிசார் ஈடுபட்டனர்.
முக கவசம் அணியாமல் வீதியில் சென்றவர்கள் மற்றும் வாகனத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களின் பெயர் அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் முகவரி என்பன பதிவு செய்யப்பட்டதுடன் சுகதார நடைமுறைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு பொலிசாரினால் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து இதன் போது பொலிசார் அறிவுறுத்தினர்.

