முஸ்லிம் எம்.பிகளை “சந்திக்கவுள்ள” இம்ரான்கான்!

Date:

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) அவரது விடுதியில் சந்திப்பதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துடன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆயிஷா அபூபக்கர் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தினார்.

இச்சந்திப்பின்போது பலவந்த ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான்கானுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர். இந்த சந்திப்பின் மூலம் சமூகத்துக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க பிரார்த்திப்போம்.

—————‐—————————Update——————–

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மூலம் தற்போது அதற்கான உறுதிப்படுத்தல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...