அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள தயார் | ரஷ்யா

Date:

அமெரிக்காவின் எந்தவிதமான பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை.

அலெக்ஸிக்கு கடந்த வருடம் உடல் நலம் பாதித்தத்தில் ரஷ்யாவின் பங்கு எதுவும் இல்லை.

எங்கள் மீது எந்தவிதமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தாலும் அதனை எதிர் கொள்ள தயாராக உள்ளோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைத்தது தொடர்பாக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.

அவ்வாறு விதித்தால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், ரஷ்யா மீது விதிக்கும் முதல் பொருளாதாரத் தடை இதுவாகும்.

ஜோ பைடனுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப், ரஷ்யாவுடன் நட்பு பாராட்டியே இருந்தார். மேலும், ரஷ்யாவின் மீது எந்தவிதத் தடைகளையும் அவர் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...