UPDATE : கிளிநொச்சி இரணைதீவில் ஜனாசா புதைப்புக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது (காணொளி)

Date:

கிளிநொச்சி இரணைதீவில் ஜனாசா புதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 09 மணியளவில் இரணைமாதாநகர் இறங்குதுறையில் இடம்பெற்றது.

இரணைதீவு மக்களும் கிராம மட்ட மைப்புக்கள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும்  இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்கு தந்தையர்களும், சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டனர்.

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியை தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

குறித்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாக சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று குறித்த பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு பூர்வீக குடிகளாக இருந்த மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வே்ணடும் என இரணைதீவு மக்களும், கோரிகை முன்வைத்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.

https://fb.watch/3-5Vpfr2QW/

https://fb.watch/3-5YnlMREp/

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftamil.newsnow.lk%2Fvideos%2F1020703221666549%2F&show_text=false&width=560″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...