கிளிநொச்சியில் காணாமல் போன இரண்டு குழந்தைகளும் சடலங்களாக மீட்பு

Date:

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் நேற்றைய தினம் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார். இதேவேளை 2 வயது ஆண் குழந்தை சடலமாகவும் மீட்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.

இதேவேளை ஏனைய இரு குழந்தைகளையும் தேடி வந்த நிலையில் அவர்களும் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் இடம்பெற்றது.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது 3 பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு குறித்த தாயார் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அவர் உயிருடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் 5 வயது மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகள் தொடர்பில் பொலிசாரும், கிராம மக்களும் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வந்தனர்.

இதன்போது குறித்த இரு குழந்தைகளும் கிணற்றில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்ற வருவதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி நிருபர்
சப்த சங்கரி

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...