ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் | இலங்கை வேண்டுகோள்

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை கைவிடப்பட்டுள்ளதால் தீர்மானத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அகற்றவேண்டும் என ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி சிஏ சந்திரப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இலங்கை தொடர்பான முதன்மை குழுவிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை இராணுவமயப்படுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரிகளுக்கு அரசதுறையில் இணைந்துகொள்வதற்கான உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை நிலவரம் மோசமடைவது குறித்து முன்கூட்டிய ஆரம்ப எச்சரிக்கைகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள சந்திரபெரும ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சுதந்திரமானதில்லை பக்கச்சார்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும்...

அமைச்சர் விஜித ஹேரத் சவூதி பயணம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்...

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றில் ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக...

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...