அரசாங்க சேவைக்கு ஆட்களை சேர்ப்பதற்கான பரீட்சை, அவர்களுக்கான பதவி உயர்வுகளுக்கான பரீட்சை அவர்களின் திறன் ஆற்றலுக்கான பரீட்சைகளை நடத்தல், பதவி உயர்வுக்கான தடைதாண்டல் பரீட்சைகளை நடத்தல் என்பன இதுவரை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இந்த நடவடிக்கைகளை இனிமேல் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனமானSLIDA விடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு கடந்த வருடம் எடுக்கப்பட்டது இருந்தாலும் அது அமுல் செய்யப்படவில்லை. இப்போது அதனை அமல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கை பரீட்சை திணைக்களம் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து உள்ளது.
இலங்கை பரீட்சைத் திணைக்களம் எந்தப் பரீட்சையை நடத்தினாலும்
அதற்கான ரகசிய தன்மைகள் மிக உச்ச மட்டத்தில் பேணப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த அபிவிருத்தி நிர்வாக நிலையத் திடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் பரீட்சைகளின் போது இந்த ரகசியத் தன்மை பேணப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மேற்படி நிறுவனம் அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்கும் விடயத்தில் அனுபவம் பெற்றுள்ளதே தவிர அவர்களுக்கான பரீட்சைகளை நடத்தும் விடையத்தில் இந்த நிறுவனத்திற்கு எந்த அனுபவமும் கிடையாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதுமட்டுமன்றி குறிப்பிட்ட பரீட்சைகளை நடத்தும் பொறுப்பு இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விஷேட சட்டம் ஒன்றின் மூலம் பரீட்சைகள் திணைக்களத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே அதை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக இருந்தாள் குறிப்பிட்ட சட்டத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது .