அமெரிக்காவால் வழங்கப்படும் துணிச்சல் மிக்க பெண்ணுக்கான விருது இம்முறை இலங்கையைச் சேர்ந்த ராணிதா ஞானராஜாவுக்கு

Date:

இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணி ராணிதா ஞானராஜாவுக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் துணிச்சல் மிக்க பெண்மனிக்கான (IWOC) இவ்வாண்டின் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க முதற் பெண்மனி டொக்டர் ஜில் பைடன், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்தனி பிலிங்கன் ஆகியோரால் ராணிதா ஞானராஜாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைச் செயற்பாடுகளுக்காக ராணிதா ஞானராஜா வழங்கிய பங்களிப்பு, மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக வழங்கிய சேவைகள், இனரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள், சமய ரீதியான சிறுபான்மையினருக்கான சேவைகள் என்பனவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிச்சல் மிக்க பெண்ணுக்கான இந்த விருது 2007ம் ஆண்டு முதல் அமரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் சமாதானம், மனித உரிமைகள், மற்றும் மகளிர் மேம்பாடு என்பனவற்றில் துணிச்சலோடு தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தும் பெண்களை கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...