நாட்டில் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு அவரசரமாக தடை விதிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது மாத்திரமன்றி முழு உலகுக்குமான ஒருபிரச்சினையாகும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த தடையினை அவசரமாக மேற்கொள்ள முடியாது. இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.