அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இன்று காலை இடம்டபெற்ற துப்hக்கிச் சூட்டு சம்பவங்களில் எட்டு பெண்கள் உயிர் இழந்துள்ளனர். இன்று அதிகாலை வேளையில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஜோர்ஜியா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள ஸ்பா என அழைக்கப்படும் உடல் மஸாஜ் மற்றும் களியாட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட எட்டுப் பெண்களில் ஆறு பேர் ஆசிய நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்று மஸாஜ் நிலையங்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் ஒரே நபரே இந்த மூன்று தாக்குதலையும் நடத்தி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 21 வயது சந்தேக நபர் ஒருவரை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தாக்குதலுக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.