மன்னாரில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார்   உத்தியோக பூர்வ இல்லம் சட்டமா அதிபரினால் திறந்து வைப்பு

Date:

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார்   பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை 9.8 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிருவாக பிரிவின் தலைவர் மேலதிக மன்றாடியார் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவத்தன அவர்களின் அழைப்பில் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேரா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உத்தியோக பூர்வ இல்லத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
-குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகஸ்தர்கள்,நீதிபதிகள்,மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்ஸி டி மேல்,பொலிஸ், இராணுவ அதிகாரிகள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது  மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்களினால் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேரா அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் அமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்...

ரபீஉனில் ஆகிர் மாதத்தை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1447 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் மாநாடு இன்று...

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை...

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...