கொழும்பு அமரபுர பீடத்தின் மாநாயக்கர் கொட்டுகொட தம்மவாச தேரர் காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் இவ்வாறு காலமாகியுள்ளார்.
நோய் நிலைமை காரணமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தனது 88வது வயதில் காலமானார்.