மேல் மாகாண பாடசாலைகள் மார்ச் மாதம் 29 ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

Date:

மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில், மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களையும் ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்க தீர்மானித்திருப்பதாக கூறினார்.

மேல் மாகாண அரச பாடசாலைகளில் 5, 11, 13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ஏனைய தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...