கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் மீட்கப்பட்ட பாரிய தொகை ஆபரணங்கள்

Date:

கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைவிடப்பட்டிருந்த ஒரு தொகை தங்க ஆபரணங்களை சுங்கபிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விமானநிலையத்தின் பயணிகள் கழிப்பறை பகுதியில் குறித்த தங்க ஆபரணதொகை கைவிடப்பட்ட நிலையில் சுங்கப்பிரிவினரால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்ரிய தெரிவித்துள்ளார்.

சுமார் 13 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் அடங்கிய மூன்று பொதிகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபரினால் கடத்துவதற்கு முற்பட்ட மேலும் ஒரு தொகை தங்க ஆபரணங்கள் இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என சுங்கத்திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...