விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை!

Date:

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (IDB), Colossus (Pvt) Ltd தனியார் நிறுவனத்திற்கு உலோகம் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டின் மீது, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், ஆகையால் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அக்குற்றச்சாட்டுக்கள் குறித்தான உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவருக்கு, எழுத்துமூலமான கோரிக்கை கடிதம் ஒன்றினை இன்று (08) நேரில் சென்று சமர்ப்பித்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிஷாட் எம்.பி கூறியதாவது,

“கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழிருந்த, கைத்தொழில் அதிகார சபை, வருடம் ஒன்றுக்கு சுமார் முன்னூறு நிறுவனங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில், ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டுக்கு சொந்தமான நிறுவனத்துக்கும் மூலப் பொருட்களை வழங்கியிருக்கின்றது.

 இந்த விற்பனை, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகளின் மேற்பார்வையுடனேயே நடைபெறுவது வழமையானது.

இவ்வாறான விடயங்களில், அமைச்சரான எனக்கு எந்தத் தொடர்புமில்லை. அத்துடன், இதில் நான் தலையீடு செய்வதும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில அரசியல்வாதிகள் என்னைக் குறிவைத்து கிளப்பிய புரளிகளில் இதுவும் ஒன்றாகும்” என அவர் தெரிவித்தார்.

மன்னார் நிருபர்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...